உயிர் என்னும் உயிர் எழுத்துக்கள்உடல் என்னும் மெய் எழுத்துக்களோடு சேர்ந்து உருவாகிய உயிர் இனமே! எம் இனத்தின் உயிரே !தமிழே !உனக்கு வலிமை சேர்ப்பதாய் வல்லினங்கள், இனிமை தரும் இடையினங்கள், மென்மையைத் தரும் மெல்லினங்கள்! இவை கொண்டுள்ள ஓசை களுக்குத்தான் ஒப்புண் டோ இப்புவியில்!.உன் பெயருக்கு மூன்றெழுத்து! தொன்மை இளமை இனிமை என இயல்புகள் மூன்று!இயல், இசை, நாடகம் என வடிவங்கள் மூன்றுமூவேந்தர்களால் முப்பெரும் சங்கங்கள் கண்ட நீ இன்றுமுன் சென் சங்கத்திலும் முழங்குகின்றாய்!ஐம்பெரும் காப்பியங்களை அணிகலன்களாய் கொண்டு அழகுற்றாய் நீஐந்து இலக்கணத்தில் பொருள் இலக்கணத்தை இவ் வையம் உன்னிடம் மட்டுமே கண்டதுஐந்து ஆயிரங்கள் அகவை இருக்கலாம் உனக்கு என்கின்றனர் உனது ஆராய்ச்சியாளர்கள்ஒலி பெறும் உருவோ உருபெறும் ஒலியோ என உன் தோன்றலின் மூலக்கூறுகள் கொண்ட தொல்காப்பியம்!அது தொல்காப்பியர் உனக்கு இட்ட ( பாது) காப்பு!திருவள்ளுவரால் இரண்டு அடியில் இவ்வுலகை ஈர்த்த நீஇளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் செப்பியதோ செம்மை!ஒளவையின் அமுத மொழியாய் விளங்கிய நீஒள தடம் சொன்னாய் திருமூலரின் திருமந்திரத்தில்!உனக்கு தலை கொடுக்க முற்பட்ட குமண வள்ளல்ஒரு தமிழ் மாணவன் என கல்லறையில் பொறிக்க விரும்பிய சியு .போப் எனஉன் மீது தீரா பற்று கொண்டவர்எண்ணற்றோர் !பாரதியாரிடம் சுதந்திர தாகத்தோடு விடுதலை வீறு கொண்ட  நீபாரதிதாசனிடம் புரட்சி மிக்க எழுச்சி கண்டாய்உன் பெயரையே உன் மாநிலத்திற்கு அறிஞர் அண்ணாவால் பெற்ற நீசெம்மொழியாய் அறிவிக்கப் பட்டாய் அன்றைய குடியரசுத் தலைர் அப்துல் கலாமால்மரத்தில் மறைந்த மாமத யானையாய் தோன்றுகிறது எமக்கு நீ பெற்றிருக்கும் படைப்புகள் !மரத்தை மறைத்த மாமத யானையாய் அப் படைப்புக்களின் மொழி பெயர்ப்புகள்உன்னை உணர்வாய் ஊட்டிய தாய்க்கும் தந்தைக்கும்அறிவாய் புகட்டிய ஆசிரியைக்கும் நன்றி கூர்ந்து  உன்னை காத்து  தலைமுறைகளுக்குத் தருவது தலையாய கடமைour first post. Edit or delete it, then start writing!